-AGM.ஆசாத்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தேசியத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தையொட்டிய குர்ஆன் தமாம் , துவாப் பிரார்த்தனை மற்றும் இராப்போசன நிகழ்வுகள் இன்று இரவு இஷா தொழுகையின் பின்னர் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநரக சபை உறுப்பினர்களான ஏ.எல்.அமீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்தீன், எம்.நபார், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்தலி, சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா மற்றும் கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது அல்-வாஹிய்தியா அரபுக் கல்லூரி மாணவர்களினால் குர்ஆன் தமாம் செய்யப்பட்டதுடன் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் மறுமை ஈடேற்றத்திற்கான துஆப் பிரார்தனையினை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (றாசாதி) நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment