Pages

Aug 31, 2013

இலங்கை சகோதரர் கட்டார் நாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்பு

யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது றிஸான் இன்று (31.08.2013) சனிக்கிழமை அதிகாலை கட்டார் நேரம் 5:40 மணியளவில் சனாயா 10 ( Industrial area 10) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

நேற்றிரவு கட்டார் சனயாவில் உள்ள தனது தங்குமிடத்தில் அவருடன் அறையில் வசிப்பவர்கள் இராப்போஷனத்துக்காக இவரை அழைத்த போது “நான் பிறகு சாப்பிடுகிறேன்” எனக் கூறிவிட்டு பல தொலைபேசி அழைப்புகளில் உரையாடியவராக இருந்துள்ளார்.
மேலும் இச்சகோதரர் சுபஹ் தொழுகைக்குச் சென்று வந்ததையும் அறையில், கூட இப்பவர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

பின்னர் தனது அறைக்குப் பக்கத்தில் உள்ள களஞ்சிய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என பலராலும் நம்பப்படுகிறது,
இது பற்றிய மேலதிக விசாரனைகளை கட்டார் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் 1982 ஆகஸ்ட் 02 ம் திகதி பிறந்தவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment