ஒலுவில் துறைமுக திறப்பு விழா இன்று துறைமுகங்கள், நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் ரோஹித அபேகுனவர்த்தன தலமையில் இடம்பெற்றது.
மீனவர் துறைமுகம், வர்த்தக துறைமுகம் ஆகிய இரண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்அவர்களால்திறந்து வைக்கப்பட்டது.
தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம், சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும், அரச உயரதிகாரிகளும், பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காணி இழந்தவர்களுக்கான காசோலையும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டதுடன்
ஜனாதிபதிக்கு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவால் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.துறைமுகத்தை பார்வையிடுவதற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment