னில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை ஜப்பானின் டோக்கியோ நகரம் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 60 க்கு 36 என்ற கணக்கில் தெரிவான டோக்கியோ நகரம் இந்த சந்தர்ப்பத்தை தட்டிக்கொண்டுள்ளது.
இதற்கான இறுதி வாக்கெடுப்பில், டோக்கியோ நகரத்துடன் துருக்கியின் ஸ்தான்புள் நகரம் போட்டியிட்டிருந்தது.
1964 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக நடைபெறவுள்ளது.
இதேவேளை பரா ஒலிம்பிக் போட்டிகளும் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறவுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரத்தை தெரிவு செய்வதற்கான போட்டியில், டோக்கியோ, ஸ்தான்புள் மற்றும் ஸ்பெய்னின் மெட்ரிட் ஆகிய நகரங்கள் கலந்துகொண்டிருந்தன.
No comments:
Post a Comment