-இர்பான்-
சம்மாந்துறையில் இரண்டாவது நாளாகவும் யானையின் அட்டகாசம் தொடர்வதால் மக்கள் கடுமையான பீதியுடன் காணப்படுகின்றனர்
நேற்று சனிக்கிழமை அதிகாலை சம்மாந்துறை லேக் வீதி மற்றும் சம்மாந்துறை 1ம்,2ம், பிரிவுகளில் நள்ளிரவு வேளையில் ஊருக்குள் புகுந்த
காட்டு யானை வீடுகள் ,பயிர்கள்,மற்றும் நெல் மூட்டைகள் உள்ளிட்டவைகளை சேதமாக்கியிருந்தது இதனால் பீதியுடன் இருந்த மக்களுக்கு இன்று (08.09.2013) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்துள்ளது இதனால் செய்வதறியாது இப்பிரதேச மக்கள் நிம்மதி இழந்து காணப்படுகின்றனர்
இன்று அதிகாலை ஊருக்குள் நுழைந்த காட்டு யானை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் விவசாயப் பிரிவின் சுற்றுமதிலை உடைத்து பயிர்களை சேதமாக்கியுள்ளது அதுமட்டுமல்லாது பாடசாலையை சுற்றியுள்ள வீடுகளின் சுவர்,கேட்,நெல் மூட்டைகள் போன்றவற்றையும் சேதமாக்கியுள்ளதுடன் நேற்று சேதமாக்கிய வீட்டை மீண்டும் இன்று அதிகாலை சேதமாக்கியுள்ளது
இக் காட்டுயானையின் வருகையால் நிம்மதி இழந்து தவிக்கும் இம்மக்கள் நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் மேலும் காட்டு யானைகளின் வருகை
பாதுகாப்பு அற்ற நிலை இன்று சம்மாந்துறையில் தோன்றியுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,மற்றும் பொலிசார் உரிய நடவடிக்கையை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment