இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பரவலாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் முஸ்லிம் தீவரவாதத்தைப் பரப்ப முற்படும் சக்திகள் தொடர்பில் நாட்டின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சில முஸ்லிம் தீவிரவாத சக்திகள் இலங்கையை தீவரவாதத்தைப் பரப்புவதற்கான மையப் புள்ளியாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றன.
அத்துடன் இலங்கையினுள்ளும் இந்த சக்திகள் தமது தீவரவாத கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கின்றன எனும் அச்சம் மேலோங்கியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment