Pages

Sep 4, 2013

இலங்­கைக்கு கடத்­தப்­பட்ட போதைப் பொருளின் பின்­ன­ணியில் தாவூத் இப்­ரா­கிம்?

இலங்கையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட 250 கிலோ கிராம் பிரவுண் சுகர் ஹெரேயின் போதைப் பொருள் விவ­கா­ரத்­துடன் இந்தியாவில் தேடப்பட்டு வரும் பிரபல பாதாள உலக தலைவரும் மும்பாய் தொடர் குண்டு வெடிப்புச்சம்பவத்துடன் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் மாஃபியா அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட கொள்கலன் பெட்டியின் உரிமையாளரது பெயரை தாவூத் இப்ராஹிமின் அமைப்பு மாற்றியுள்ளதாக புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த கொள்கலனின் உரிமையாளராக ஜமால் என்பவர் இருந்த போதும், இதற்கு முன்னர் தாவூத் இப்ராஹிம் குழுவினர் பாகிஸ்தானை சேர்ந்த வேறு ஒருவரின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் இலங்கையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்­த ஜமால் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்படியான கொள்கலன் ஒன்றை இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் பாகிஸ்தான் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பரீட்சித்தனர் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

எனினும் இந்த ஸ்டிக்கர் பாகிஸ்தான் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் ஸ்டிக்கரா என்பது சந்தேகத்திற்குரியது என இலங்கை விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment