Pages

Sep 4, 2013

அஷ்ரபின் மரணம் சம்பவித்து 13 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஹக்கீம் பொறுமையாகவே இருக்கின்றாரா?

முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினரால் பெரும்தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத்தந்த சரித்திரநாயகன் அவர் மறைந்தநாளிலோ பிறந்தநாளிலோ மட்டுமன்றி வருடத்தின் எல்லாநாட்களிலும் நினைவுகூறப்பட வேண்டியவர். அவர் மரணித்து எதிர்வரும் 16 ஆம்திகதி 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் அவருடைய அகாலமரணம்பற்றிய மர்மம் துலக்கப்படவில்லையே எனமக்கள் இன்றும் ஏக்கம் தெரிவிக்கின்றனர்.

அன்னார் விபத்தில்மரணித்தாரா? அல்லது திட்டமிடப்பட்ட சதிமுயற்சியின் காரணமாக மரணமடையச் செய்யப்பட்டாரா? என்று அன்னாரை நேசித்தமக்களுக்கு பொறுப்புவாய்ந்தவர்களால் இதுவரைத் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் கவலை வெளியிடுகின்றனர்.

தலைவர் அஷ்ரபின் மரணம்பற்றிய சிலகாத்திரமான தகவல்கள் தமக்குகிடைத்தன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் ஆரம்பத்தில் ஆவேசமாகக் கூறினார். ஆனால் பெருந்தலைவரின் மரணத்தைச் சூழ்ந்திருந்த மர்மம்மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லையே என்றும் மக்கள்குறை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்அஷ்ர்ஃபின் கோட்பாடொன்றான ‘சரியான முடிவை பிழையான நேரத்தில் எடுத்தால் அதுவும் பிழையாகிவிடும்’ எனஅடிக்கடி கூறும் முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம் அன்னாரின் கோட்பாட்டிற்கெணங்க சரியான ‘நேரத்தில் சரியான முடிவைஎடுக்க’ 13 வருடங்கள் கடந்தும் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

மர்ஹும் அஷ்ரபினால் வளர்க்கப்பட்டவர்கள், அன்னார்மீது நம்பிக்கைகொண்டவர்கள். அவர்மீதுவிசுவாசம் கொண்டவர்கள், எனக்கூறுபவர்கள் எல்லோரும் அவருடையபெயரால் இதுவரையும் ஏன் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறவிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தலுக்குக்கூட அன்னாரைப்பற்றி மேடைகளில் வாய்கிழியப்பேசி அரசியல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன்மூலம் அரசியல் அதிகாரங்களையும், பதவிகளையும் காலத்திற்குகாலம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அன்னாரின் மரணத்தின் பின்னால்உள்ள மர்மத்தை வாய்திறந்துபேசுவதாக இல்லை, பேசுவதற்கு முன்வருவதாகவும் இல்லை எனவும் அன்னாரின் அனுதாபிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

மாமனிதர் அஷ்ரபின் மரணம்தொடர்பாக தற்போதய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப்ஹக்கீம் கடந்த 2001.08.10 ஆம்திகதி கல்முனை நகரமண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற ‘மக்கள் நீதிமன்றத்திற்குமுன் முறையீடு’ என்னும் மக்கள் நிறைந்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நிகழ்த்திய உரையைப்பலரும் இன்றும் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.

அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம் அக்கூட்டத்தில் அன்று மர்ஹும் அஷ்ரபின் அகாலமரணம் தொடர்பாக என்னபேசினார்? அவர் இவ்வாறுதான் பேசினார் எனமக்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்:-

தலைவர் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னணியிலே நடந்தபலவிடயங்கள் இன்னும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அப்படியான பலவிடயங்கள் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் நேரில் வந்தும் எங்களிடம் சொல்கிறார்கள். எழுதியும் தருகிறார்கள். கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதுஒரு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மறைந்த தலைவருக்கு என்னநடந்தது என்பதை நாம்பார்க்கவேண்டும். மறைந்த தலைவரோடு கடைசி மணித்தியாலங்களில் இருந்த பலர் உள்ளனர். பலவிதமான திடுக்கிடும் தகவல்களை அவர்கள் சொல்லுகிறார்கள்.

விசாரணைக்குமுன்வரும்வரை பொறுமையாக இருந்து இந்தவிடயங்களை வெளியிடலாம் என உத்தேசித்திருக்கின்றேன்’ இவ்வாறு அமைச்சர் ரவூப்ஹக்கீம் அன்று திரளாகக்கூடியிருந்த மக்கள்மத்தியில் பேசுகையில் கூறியிருந்தார் எனத்தெரிவிக்கிறார்கள்.

மாமனிதர் அஷ்ரபின் மரணம் சம்பவித்து 13 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவர்பொறுமையாகவே இருக்கின்றாரா? எனமக்கள்கேள்வி எழுப்புகின்றனர்.

இதுமாத்திரமல்ல. அஷ்ரபின் மரணம்தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்க கடந்த 2000.10.04 ஆம் திகதி சாய்ந்தமருதில் நடைபெற்றபொதுக் கூட்டம்ஒன்றில் உரைநிகழ்த்தும்போது தெரிவித்தகருத்தும் அஷ்ரபினால் அரசியல்நடத்துபவர்கள் மற்றும் அதிகாரத்திற்குவந்திருப்பவர்கள் போன்றோரின் கவனத்திற்கு மக்கள் கொண்டுவந்து நினைவூட்டுகின்றனர்.

ரணில்விக்கிரமசிங்க அன்று என்னபேசினார்? அவர் இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு வாக்குறுதிஒன்றை வழங்கி உரைநிகழ்த்தினார் எனமக்கள் இன்றும்தெளிவாகக் கூறுகின்றனர்,

‘இந்நாட்டில் ஐக்கியதேசியக்கட்சி ஆட்சிஅமைத்தபின் மர்ஹும் அஷ்ரபின் அகாலமரணம் குறித்து நாங்கள் ஒரு பூரணவிசாரணை நடாத்துவோம். இதற்கென அமைக்கப்படும் விசாரணைக்குழுவில் மர்ஹும்அஷ்ரபின் குடும்பத்தைசேர்ந்த ஒருவரையும் நியமிப்போம். அமைச்சர் அஷ்ரபின் மரணத்தில் சந்தேகம் எழும்போது இம்மரணத்தின் காரணம் என்ன? இதன்பின்னணி என்ன? இவற்றையெல்லாம் நாட்டுமக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

நானும் அமைச்சர்அஷ்ரபும் அரசியலில்வேறுபட்டு இருந்தாலும் அன்னாரும் நானும் நல்லநண்பர்கள். குறைந்தபட்சம் ஒருநண்பர் என்றமுறையிலாவது விசாரணைக்குழுவை நியமித்து உண்மையைக் கண்டறிய வேண்டியகடப்பாடு எனக்குஉண்டு. அமைச்சர் அஷ்ரபின் மரணம்தொடர்பாக எமதுவிமானப்படையினர் மீதுகுற்றத்தைச்சுமத்திவிட்டு எவரும் விலகிச்சென்று விடமுடியாது. அமைச்சர் அஷ்ரப் மரணிப்பதற்குமுன் இரண்டுநாட்களில் பலபிரச்சினைகளை அவர் எதிர்நோக்கினார் என்பதும் அவர் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். எனவே, அன்னாருடைய மரணத்தின்பின்னணி அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ரணில்விக்கிரமசிங்க அன்று கூறியிருந்தார். எனமக்கள் அவரின்பேச்சை நினைவில்வைத்துக் கூறுகின்றனர்.

தற்போதய ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம் நீதிஅமைச்சராகப் பதவிவகிக்கும் இக்காலத்திலாவது மாமனிதர் மர்ஹும் அஷ்ரபின் மரனம்குறித்த விசாரணையை நடாத்துவதற்கு குழுவொன்றை நியமித்து குழுவின்முடிவை அன்னாரை நேசிக்கும் மக்களுக்கு எடுத்துக்கூறமுடியும் என அன்னார்மீது அபிமானம் கொண்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதுமாத்திரமல்லாமல், அன்னாரின் மரணத்தைச் சூழ்ந்துள்ள மர்மம்துலக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் சிறுபான்மை இனதுடிப்புள்ள அரசியல் தலைவர்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான படிப்பினைகள் அதிலிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியுமல்லவா? என்றும் மக்களால் அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது.

மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் விபத்தால் ஏற்பட்டதா? அல்லது திட்டமிடப்பட்ட சதியால் ஏற்படுத்தப்பட்டதா? என்பதை அன்னாரை நேசித்தமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அன்னார்வளர்த்த கட்சியின் மூலம் மக்கள்முன்கொண்டுவரப்பட்டு (பலகட்சிகளில் இருந்தாலும்) தற்போது ஆட்சிஅதிகாரத்தில் இருப்பவர்களின் கடமையல்லவா?

No comments:

Post a Comment