தமது எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கா சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துமானால், தாம் சிரிய அரசுக்கு உதவி செய்யப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த ஜி20 மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளின் போது புடீன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா தொடர்ந்து ஆயுமதம் வழங்கிவந்ததாகவும் அவர்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவி வந்ததாகவும் அசாத் கூறியுள்ளார். அதோடு ஏவுகணை தாக்குதலிருந்து பாதுகாக்கும் ஆயுதவகைகளை சிரியாவுக்கு தொடர்ந்து வழங்கும் ஒப்பந்தத்தை நீட்டிக்க போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
சிரிய அரச படைகளின் இராசயன ஆயுத தாக்குதலிலேயே 500 சிறுவர்கள் உள்ளிட்ட 1500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுதியாக நம்புவதுடன் அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்துள்ள நிலையில் ரஷ்யா இதனை திட்டமிட்டச் சதியாகவும், சர்வதேசம் தலையிட்டு அசாத் ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளே வேண்டுமென்று இராசயன ஆயுத தாக்குதலை நடத்திவிட்டு அரசு மீது பலி போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இராசயன ஆயுத தாக்குதல்களை தடுப்பதற்காக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு என்றும் தமது ஆதரவிருக்கும் என ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஸ்பெயின் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
எனினும் அதற்காக சிரியா மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை ஒன்றை வெளியிலிருந்து மேற்கொள்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கு என ரஷ்யா, சீனா மட்டுமல்லாது இந்தியா, பிரேசில் நாடுகளும் வலியுறுத்துகின்றன.
No comments:
Post a Comment