புத்தளம் - காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற் பிராந்தியங்கள் நாளை காலை 6 மணியிலிருந்து கொந்தலிப்பாகவும் அபாயகரமானதாகவும் அமையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த கடற் பிரந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த 48 மணித்தியலங்களில் நாட்டில் மேல்,தென்,சப்ரகமுவ,மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment