நீதிமன்றங்களில் தமிழ் மொழி மூலம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ஆங்கிலம் அல்லது சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பு பிரிவொன்றை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03 திறந்து வைத்தனர்.
இவ்வாறான காரணங்களால் எழும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கண்டு, வழக்கு விசாரணைகளை துரிதமாக நடாத்தி முடிக்க ஏதுவாக இந்த மொழிபெயர்ப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளில் அபிவிருத்தி நிதியம் இதற்கான அனுசரனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மேல் நீதிமன்ற தலைவர் எஸ். ஸ்ரீpஸ்கந்தராஜா நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்க, புதிதாக நிறுவப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு பிரிவின் பணிப்பாளர் ஏ. ஞானதாசன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
No comments:
Post a Comment