Pages

Sep 3, 2013

13 வயதில் கல்லூரியில் சேர்ந்த சிறுமி

லக்னோ: சிறுவயதிலேயே படிப்பில் மேதையாக திகழும் 13வயது சிறுமி லக்னோ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தாள்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சிறுமி சுஷ்மா வர்மா. வயது 13. 

இவளது தந்தை தேஜ் பகதூர் கூலித் தொழிலாளி. சிறுவயதிலேயே படிப்பில் படு சுட்டியாக இருந்த சுஷ்மா, ஆசிரியர்களையே வியக்க வைத்தாள். படிப்பில் அதீத புத்திசாலித்தனத்தால் டபுள் பிரமோஷனாக பெற்று 7 வயதிலேயே உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தாள்.பின்னர், மேல்நிலை பள்ளிப்படிப்பையும் முடித்து, லக்னோ பல்கலைக்கழத்துடன் இணைந்த கல்லூரியில் பி.எஸ்சி தாவரவியல் பட்டப்படிப்பை இந்த ஆண்டு முடித்தாள். 

13 வயதாகும் சுஷ்மாவின் படிப்பையும் அறிவையும் கண்ட பல்கலைக்கழக நிர்வாகம், சுஷ்மாவுக்கு அவளது விருப்பப்படி, எம்.எஸ்சி மைக்ரோ பயாலஜி பட்டப்படிப்பில் சேர அனுமதி அளித்துள்ளது. அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த சுஷ்மாவுக்கு அனுமதி கடிதம் அனுப்பும் வரை காத்திருக்குமாறு கூறப்பட்டது. இன்னும் கடிதம் வராத நிலையில், லக்னோ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததால், வீட்டில் இருந்து தொலைவில் இருந்தாலும் ஒரு ஆண்டு வீணாவதை விரும்பாமல் இங்கேயே சேர்ந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறாள் சுஷ்மா.

No comments:

Post a Comment