அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் கடமையி்ல் இல்லை!
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையிலான குழுவினர் அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு இன்று (12) காலை சுமார் 8.30 மணியளவில் திடிர் விஜயம் மேற் கொண்ட போது வைத்திய சாலையில் இரண்டு சிற்றூழியர்கள் மாத்திரமே கடமையில் இருந்தது தெரியவந்தது.
இச் சந்தர்ப்பத்தில் பெண் ஊழியர் தனது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
நீண்ட நாட்களாக இவ் வைத்திய சாலையில் நிர்வாக சீர்கேடு நிலவுவதாகவும், உரிய நேரத்திற்கு வைத்தியர்களும்,ஊழியர்களும் கடமைக்கு வருவதில்லை என்று பொது மக்கள் பல மாதங்களாக மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர்களுக்கு அறிவித்து வந்த வேலையிலே இவ் திடீர் விஜயம் மேற் கொண்டதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
இக் குழுவில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர்.

No comments:
Post a Comment