Pages

Sep 14, 2013

கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகரை சந்திப்பு

-அகமட் எஸ். முகைடீன்-

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் ஈ.எச். அஸ்மி சனூர்டீனை நேற்று (13.09.2013) உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கல்முனை மாநகர சபையானது வரிவருமானங்களின் மூலம் திண்மக்கழிவு
முகாமைத்துவம் மற்றும் வடிகான் பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செலவீனங்களுடன் இணைந்த பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது கடினமான, விடயமாகும். எனவே அபிவிருத்திக்கான நிதிகளை பெறுவதற்கான மாற்று உபாயங்களையும் வழிவகைகளையும் ஏற்படுத்துவது அவசியமாகும். 

இதற்கமைவாக கல்முனை நகரினை கிழக்கின் அழகிய நகரமாக மாற்றுவதற்கு முதல்வர் மேற்கொண்டுவருகின்ற முயற்சியின் ஒரு
அங்கமாகவே மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கல்முனை அபிவிருத்திக்கு மலேசிய அரசாங்கத்தின் உதவியினை பெறுவது தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.



No comments:

Post a Comment