Pages

Sep 13, 2013

குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை

எமரன் (Amaron) மற்றும் சிலோன் வோட்டர் (Ceylon Water) ஆகிய பெயர்களிலுள்ள குடிநீர் போத்தல்களை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு சுகாதார அமைச்சு நேற்று முதல் தடைவிதித்துள்ளது. இதேவேளை மேற்படி குடிநீர் போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்தார்.(Amaron) மற்றும் (Ceylon Water) ஆகிய குடிநீர் போத்தல்கள் சுகாதார அமைச்சின் கீழ் முறைப்படி எவ்வித பதிவுகளுமின்றி விற்பனை செய்யப்படுவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்தே சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நேற்று இந்த திடீர் அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.

இது குறித்து நாடு முழுவதுமுள்ள பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள அதேநேரம் எவ்வித பதிவுகளுமின்றி விற்பனையாகும் தண்ணீர் போத்தல்களை நுகர்வுக்கு உட்படுத்த வேண்டாமெனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். சந்தேகத்திற்கிடமான மேற்படி தண்ணீர் போத்தல்களில், பிரபலமான குடிநீர் உற்பத்தி நிறுவனமொன்றின் பெயர் போலியாக பொறிக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தண்ணீர் போத்தல்கள் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டு சட்ட விதிமுறைகளின் கீழ் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை நீர்பெற்றுக் கொள்ளப்படும் முறை குறித்து எமக்கு எவ்வித தகவலும் தெரியாதவிடத்து அதில் அடங்கியுள்ள குடிநீர் சுகாதாரத்திற்கு உகந்தது தானா? என எம்மால் ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க கூடிய நீரை பருகுவதன் மூலம் வயிற் றோட்டம், மஞ்சற் காமாலை உள்ளிட்ட பல நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதனால் முறையான பதிவுகளின்றிய தண்ணீர் போத் தல்களை உபயோகிக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (Amaron) ஓபாத்த, கோட்டுகொட, சமாதிகம என்ற விலாசத்திலும், (விலீylon தீatலீr ) குருவிட்ட இரத்தினபுரி போன்ற விலாசத்திலும் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து இத்தண்ணீர் போத் தல் விற்பனையை உடனடியாக தடை செய்வது தொடர்பில் அப்பிர தேசங்களைச் சேர்ந்த சுகாதார அதி காரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ள னர். சுகாதார அமைச்சும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரி களும் இணைந்து அண்மையில் கொழு ம்பு புறக்கோட்டை பகுதியில் உண வுப் பொருட்களை சோதனையிட்ட னர். இதன்போதே மேற்படி சந்தேகத் திற்கிடமான தண்ணீர் போத்தல்கள் முற்றுகையிடப் பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால கூறினார்.

இதேவேளை குடிநீரை போத்தல்களில் அடைக்கும் சகல நிறுவனங்களையும் பரிசோதித்து இரு வாரங்களுக்குள் தமக்கு அறிக்கை பெற்றுத்தருமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சகல மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும், பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார். குடிநீரைப் போத்தல்களில் அடைத்து விற்கும் அநேகர் உள்ளனர். சிலர் சுகாதாரத்துக்குக் கேடான நீர் போத்தல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

புறக்கோட்டையில் பஸ்களில் பயணிக்கும் மக்களை இலக்கு வைத்து இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.குடிநீர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பாவித்து நீர் போத்தல்கள் விற்பனையாவது தெரிய வந்துள்ளது. சுகாதார அமைச்சில் பதிவு செய்துள்ள குடிநீர் போத்தல் நிறுவனங்களின் நடவடிக்கைகள் பரிசோதிக்கப்படும். போத்தல் குடிநீர் தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்படும்.

சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உணவு மருந்து பரிசோதகர்கள் உட்பட குழுக்களைப் பயன்படுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பாவனைக்கு ஒவ்வாத நீர் மூலகங்களிலிருந்து நீரைப் பெற்று போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பாக கண்டறியுமாறும் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment