இவ்வருடத்திற்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவுள்ள இலங்கை யாத்திரிகைளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம் இம் மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் இம் முறை ஹஜ் யாத்திரை செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விசா உள்ளிட்ட பயண அனுமதி ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஸமீல் சகோதர இணையத்துக்கு தெரிவித்தார்.
இம் முறை இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்காகச் செல்ல 2240 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ ஹஜ் கட்டணம் 4 இலட்சம் ரூபா ஹஜ் குழு தலைவர் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அறிவித்துள்ள போதிலும் சில முகவர் நிறுவனங்கள் சுமார் 7 இலட்சம் ரூபா வரை கட்டணம் அறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment