Pages

Sep 5, 2013

பிரீசர் வாங்க ஆசைப்பட்டு 11 வயது மகளை விற்ற அம்மா


எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.****உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் -f <இடைவெளி> newslineinfo என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT,HUTCHI அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:newslineinfo@yahoo.com SMS:75 649 1002

நியூயார்க்: அர்ஜெண்டினாவினால் வாழ்ந்து வரும் பெண்ணொருவர் ஃபிரீசர் வாங்க ஆசைப்பட்டு தனது 11 வயது மகளை விற்றாது தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட அச்சிறுமியின் தாயாரைப் போலீசார் தேடி வருகின்றனர். 

அர்ஜெண்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வரும் பாப்லா செசரினா மான்சன் அல்டானா (30) என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகளாம். நோய்வாய்ப்பட்ட கணாவனால் சம்பாத்தியம் இல்லாத காரணத்தால், தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். பின் திடீரென மகளை தானே வளர்க்கப் போவதாக கூறி, உறவினர் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்

 அல்டானா. சமீபத்தில், பியுனோவ் எய்ர்ஸ் அருகே இயங்கி வரும் பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை சித்ரவதை செய்து வேலை வாங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது பல குழந்தைகள் அங்கிருந்து மீட்கப் பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 11 வயது சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்ததாம். அதில் அச்சிறுமி கூறியதாவது, ‘என் அப்பா ஓடியாடி, வேலை செய்ய முடியாமல் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்.

 அவரை கவனித்துக் கொண்டு என்னையும் சேர்த்து 4 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட எனது தாயார், என்னை வேலைக்கு அனுப்பினார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று என் அம்மாவிடம் கேட்டனர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே… 

என்று என் அம்மா கூறியபோது, ‘பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு, எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அவர்கள் தெரிவித்தனர். ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர். 

இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து, உதைத்து சித்ரவதை படுத்தினர். மேலும், இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர்’ எனத் தெரிவித்தாள். அச்சிறுமி அல்டானாவின் மகள் என்பது விசாரணையில் உறுதியானதைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தாயாரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment