ஒலுவில் துறைமுக கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீமினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஸ்டஈடு வழங்கல் மற்றும் திறப்புவிழா ஏற்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டம் இன்று ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களை கூட்டமண்டபத்திலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதினால் ஊடகவியலாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன் அடாத்தாக வெளியேற்ற முனைந்ததையும் வன்மையாகக் கண்டித்தனர்.
ஊடகவியலாளர்களை இன்றைய கூட்டத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் ஊடகச்செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ஊடகவியலாளர்களும் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
கூட்டம் ஆரம்பமானபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எம்.ஜெமீல், துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பந்து விக்கிரம மற்றும் துறைமுக அதிகார சபையின் உயர் அதகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் அரம்பமாகி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன கூட்டமண்டபத்திற்குள் வருகை தந்தார். அதன்பின்னர் அமைச்சர் அதாஉல்லா வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் தரப்பலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீனிடம் கோரப்பட்டிருந்தது.
அங்கு கடமையிலிருந்த துறைமுக அதிகார சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தரும், துறைமுக அபிவிருத்தி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் அநாகரியமான முறையில் ஒரு ஊடகவியலாளரை வெளியேற்ற முனைந்தபோதே சமூகமளித்த அனைத்து ஊடகவியலாளர்களும் போர்க்கொடி தூக்கியதுடன் எதனை மறைப்பதற்காக எங்களை வெளியேற்றுகின்றீர்கள் எனவும் குரல் எழுப்பினர்.
ஊடகவியலாளர்களை அழைத்துவிட்டு இடைநடுவில் சபையை விட்டு போகச்சொல்வது எந்தவகையில் நியாயமாகும். சரி அப்படித்தான் போகச்சொன்னாலும் நாகரிகமாகவல்லவா நடந்து கொள்ளவேண்டும். ஊடகவியலாளர்கள் என்ன அமைச்சர்களின் பணியாட்களா?
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ரவுப் ஹக்கீமின் ஊடகச்செயலாளர் டாக்டர் ஹாபீஸ் தனது கவலையை தெரிவித்துள்ளதுடன் ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டிய தேவை அமைச்சர் ஹக்கீமுக்கு இல்லை என்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சரின் வேண்டுகோளின் படியேதான் அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் கருத்துத் தெரிவிக்கையில், நடந்த சம்பவம் கவலையளிப்பதாகவும் அமைச்சர் அதாஉல்லா தரப்பு துறைமுக அபிவிருத்தி அமைச்சரை பிழையாக வழிநடத்தியதாலேயே மேற்படி சம்பவம் நடைபெற்றதாகக் கூறினார்.
இன்றைய கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீமினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். ஆனால் அமைச்சர் அதாஉல்லாவுக்கும், மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. அழையா விருந்தாளியாக கூட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் ஊடகவியலாளர்களை வெளியேற்றுமாறு துறைமுக அபிவிருத்தி அமைச்சருடாக சதியினையும் செய்துள்ளனர் என்றார்.
எது எப்படியிருந்தாலும் ஊடகவியலாளர்களை எள்ளுக்கீரையாக பயன்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். எந்தக்கட்சிக்கும், எந்த அமைச்சருக்கும் வக்காளத்து வாங்கவேண்டிய தேவை அவர்களுக்கில்லை. மக்களுக்காக நடப்பவைகளை வெளிக்கொணர்வதே அவர்களது பணியாகும்.

No comments:
Post a Comment