Pages

Aug 31, 2013

அட்டாளைச்சேனையில் விசேட மார்க்க சொற்பொழிவு

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் புனித தீனுல் இஸ்லாத்தைக் கற்று அதனைப் பாதுகாத்து அதன்படி நல்லமல் செய்வதற்கு நல்லருள்பாளிப்பானாக... ஆமீன்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் மாதம் தோறும் நடாத்தப்படும் மார்க்க சொற்பொழிவு இம்முறை அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் 09.01.2013 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகையின் பின் நடாத்தப்படவுள்ளது.


இஸ்லாமிய சகோதரர்களே! நமது இஸ்லாம் மார்க்கம் புனிதமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை காட்டித்தந்துள்ளது. அதிலும் ஒவ்வொருவருடைய உரிமைகளும் எவ்வாறு பேணப்படவேண்டும், பேணப்படுவதனால் ஏற்படும் பயன்கள் யாவை? என்பது பற்றி அல்குர்ஆன், ஹதீஸ்களில் விளக்கங்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் கவலைக்குரிய விடயம் இவ்வாறு விளக்கங்கள் கிடைத்தும் இன்று எம்சமூகத்தில் பெற்றோர்களும், பிள்ளைகளும் தனது உரிமைகளை அறியாத காரணத்தினால் சமூகத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோர்களும் பிள்ளைகளும் வாழத்தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார்கள் என்பதை நாம் காணமுடிகின்றது.

இஸ்லாமிய நெஞ்சங்களே நாம் இது பற்றி தெளிவு பெறவேண்டுமல்லவா? வாருங்கள்! தெளிவு பெறுங்கள்! வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்! வெற்றிபெறுங்கள்.

சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு வருகைத்தரவுள்ளார்,
அல் - ஹாஜ், அல்ஹாபீழ், மௌலவி, யு.சு. அப்துர் ரஹ்மான் (மழாஹிரி)

(அதிபர், பாரி அரபுக் கல்லூரி, வெலிகம)
தலைப்பு:- இஸ்லாத்தில் பொற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்குமிடையிலான கடமைகள்
பெண்களுக்காக விஷேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடம் :- DP.ஜாயா வித்தியாலயம், அட்டாளைச்சேனை.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, நாம் அனைவரும் இந்நிகழ்வில் பங்குபற்றி முழுமையான தெளிவையும், அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் பெறுவோமாக, வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் தீனுல் இஸ்லாத்தின் படி வாழ்ந்து அதே நோக்கில் மரணிப்பதற்கு துணை புரிவானாக, ஆமீன்.

No comments:

Post a Comment