Pages

Aug 5, 2013

வடக்கில் ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆட்சியில் அமரும்: அமைச்சர் ரிஷாத்

எதிர் வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், அரசாங்கம் ஆட்சியமைப்பதன் மூலமே வடமாகாணத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கு உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.
இந்த நாட்டில் சுமார் முப்பது வருடங்களாக நிறைவு செய்ய முடியாமல் இருந்த யுத்தத்தை ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் ஆயுதக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் வாழும் மக்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது.

கிழக்கின் உதயம் எனும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செயகின்றதோ அது போல வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

பாதை, மின்சாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதுடன், வேலையில்லாத இளைஞர் , யுவதிகளுக்கும் பல திணைக்களங்களில் வேலைவாய்ப்புக்களையும் கொடுத்திருக்கிறது. இந்த அரசாங்கம் ஒருபோதும் இன ரீதியாகவோ, பிரதேச வாதம் பேசியோ அபிவிருத்திகளை செய்வதில்லை.

முப்பது வருட காலம் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள வடமாகாணத்தையும் அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வதற்கும், போரினால் உடமைகளை, உரிமைகளை இழந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வடமாகாண மக்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்த மாகாணத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் அன்பாக கேட்டுக்கொள்வதுடன், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இந்த அரசாங்கமே வெற்றி பெறும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment