Pages

Aug 4, 2013

இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்காவின் ஆதிக்கம் தொடர்கிறது: 2வது போட்டியிலும் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.



 இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முன்று ருவென்டி ருவென்டி போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2:0 என்ற நிலையில் தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

No comments:

Post a Comment