Pages

Aug 11, 2013

பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கிரான்ட்பாஸ் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள அமெரிக்கா அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment