கிரேன்பாஸ் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு பிரிவினரும் அதற்கு பொறுப்புசொல்லி ஆகவேண்டும்.
இந்த நாடு அனைத்து இனங்களும் வசிக்கக்கூடிய ஒரு நாடாகும். இந்நிலையில் அந்தந்த சமயங்களை பின்பற்றுபவர்களுக்கு சமயத்தளங்கள் அவசியமாகும்.
கிரேன்பாஸ் சம்பவத்தை ஆரம்பித்தவர்களும், அதே போன்று எதிர்ப்பகுதியினரும் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஒரு பகுதியை நோக்கி இன்னுமொரு பகுதியினர் கைகளை நீட்டும் போது மூன்று விரல்கள் தன் பக்கம் சுட்டிக் காட்டும். பிரிவினைவாதம், இனவாதம் என்பனவற்றை இதன் காரணமாவே நான் விரும்பவில்லை.
அதன் மூலமே இவ்வாறான பிரதிபலிப்புகள் தோன்றுகின்றன. இருப் பகுதியிலும் உள்ள சமய தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் சுமூகமான நிலையை உருவாக்கலாம்.
அதற்குரிய காலம் உள்ளது. ஆகையினால் ஒருவரையொருவர் புரிந்து இந்த சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பராமரிப்பு அமைச்சர் டிலான் பெரேரா இன்று 11-08-2013 பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment