Pages

Aug 11, 2013

கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் : முஸ்லிம் கவுன்ஸில் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஊடக அறிக்கை

2013 ஆகஸ்ட் 10 ஆந் திகதி கிராண்ட்பாஸ் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது சில இனவாதக்குழுக்களால் மேற்கொண்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை இலங்கை முஸ்லிம் ஒன்றியம் (கவுன்ஸில்) வன்மையாகக் கண்டிக்கின்றது.



உடனடியாக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக ஆணையிடுமாறும் எவ்வித பாரபட்சமோ, சலுகையோ இன்றி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறும் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதியவர்களை நாங்கள் வேண்டுகிறோம்.

இந்தப்பள்ளிவாயல் மீதானதாக்குதல் நடக்கும் போது சிரேஸ்ட பொலீஸ் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பொலிஸாரும் அந்த இடத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அமைதிக்கான எந்த முயற்சியும் செய்யாமலிருந்தது, இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மிகத் தெளிவான அடிப்படை உரிமை மீறலாகும்.

நாட்டின் எதிர்கால வன்முறைகளுக்கும், கலவரங்களுக்கும் இது ஒரு பயங்கரமான உதாரணமாக அமையலாம். வளர்ந்துகொண்டே செல்லும்துவேசஉரைகளும் ஆர்ப்பாட்டப்பேரணிகளும் மிகுந்தமனக்கிலேசம் தருகின்றன. கடந்த பல மாதங்களாக, அனுராதபுரம், தம்புள்ளை, பலங்கொடை, மஹியங்கன போன்ற பல இடங்களில் இனவாதச் சக்திகளின் பல்வேறுதூண்டல்களுக்கு மத்தியிலும் முஸ்லிம்களும் அவர்களுடைய தலைமைத்துவங்களும் மிகுந்த பொறுமையோடிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம் ஒன்றியம். பல சந்தர்ப்பங்களில் இவற்றை அதிமேதகு ஜனாதிபதி, பாதுகாப்புச்செயலாளர், பொலிஸ் மாஅதிபர் மற்றும் ஏனையபாதுக்காப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது,

சட்டத்தை தம்கையில் எடுத்துக் கொண்டுள்ளவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான உடனடிநடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாம் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் மீண்டும் வலியுறுத்துகிறோம். நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் பொலிஸார் பங்களிக்கத்தவறுமிடத்து, விளைவு வன்முறைகள் அதிகரிப்பாகும். அத்தோடு நாடு மீண்டும் ஒரு கலவரமானகாலக்கட்டத்திற்கு இழுத்துச் செல்லப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

நாட்டின் பிரஜைகளுக்கு அமைதியானதோர் இலங்கையைகட்டி யெழுப்புவதில் அதிமேதகு ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு, இலங்கை முஸ்லிம் ஒன்றியம் அதன் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது ,

என்.எம்அமீன்

தலைவர் இலங்கை முஸ்லிம் ஒன்றியம்

No comments:

Post a Comment