காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு 22-08-2013 புதன்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற சபை அமர்வில் சபை தீர்மானங்களாக யுனப்ஸ் நிறுவனம் காத்தான்குடி பிரதேசத்தில் 3வருடம் குப்பை பிரச்சினையை கையாளுவதெனவும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் காத்தான்குடியில் பாரிய சிறுவர் பூங்கா அமைப்பதற்கும்,அவுஸ்திரேலியா மெலிபன் நகர் மாநகரசபையுடன் காத்தான்குடி நகர சபையை இணைப்பதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியதாகவும் காத்தான்குடியின் பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடியதாகவும் காத்தானகுடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
இதன் போது காத்தான்குடியில் சேரும் குப்பைகள் மூலம் இயற்கை பசளைத் தயாரிக்கும் செயத்திட்டம் தொடர்பாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் உப தவிசாளர் உட்பட அதன் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு யுனப்ஸ் நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் அனா மற்றும் யுனப்ஸ் இணைப்பாளர் சுகன் , யுனப்ஸ் திட்ட ஒருங்கினைப்பாளர் குபேரன் ஆகியோரினால் சபை அமர்வில் இடம்பெற்றது.
இவ் மாதாந்த சபை அமர்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் ஜெஸீம் ,ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனி நகர சபை உறுப்பினர்களான ரவூப் ஏ மஜீட்,பாக்கீர்,சியாட்,அலி சப்ரி மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க கா-குடி நகர சபை ஏதிர்கட்சி உறுப்பினர்களான சபீல் நளீமி,நஸீர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா உட்பட காத்தான்குடி நகர சபை அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:
Post a Comment