பனடோல் வில்லை தொண்டையில் சிக்கியமையின் காரணமாக ஒன்றரை வயது குழந்தை ஒன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது.
சிலாபம் - கரவிடாஹாரய பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இன்று (23) பகல்வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக குழந்தையின் பெற்றோர் அக் குழந்தைக்கு அரை பனடோல் வில்லையை உட்கொல்ல கொடுத்துள்ளனர்.
எனினும் குழந்தையினால் அந்த வில்லையை விழுங்க முடியாத நிலையில் தொண்டையினுள் மருந்து வில்லை சிக்கியுள்ளது.
இந்நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

No comments:
Post a Comment