Pages

Jun 2, 2013

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது-பொது பல சேனா

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்  கொள்ள முடியாது என பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை நிர்மாணிப்பது தவறான அணுகுமுறையாகும். அப்பகுதி மக்களுடன் கலந்து பேசிய பின்னரே இதுபற்றி இறுதித் தீர்மானத்திற்கு வரவேண்டும். மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியின் இந்த முன்னெடுப்பு வீணான பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.

இந்த விடயம் தொடர்பில் பொது பல சேனாவினதும் சிங்கள ராவயவினதும் உதவியைப் பெற்றுக் கொள்ளப் போவதாக மட்டக்களப்பு மங்காராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் இதுவிடயமாக எம்மை தொடர்பு கொள்ளவில்லை.

எதுவாயினும் இந்த விவகாரத்தை அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவுக்கு வரவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டு.பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இவ் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.importmirror.com/2013/06/blog-post_5617.html#sthash.ZlNjC5wk.dpuf

No comments:

Post a Comment