அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களினது இணையத்தின் ஏற்பாட்டில் கடந்த 01,02 .06.2013 ஆந் திகதிகளில் ஹம்பாந்தோட்டை காளான் விதை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் ' காளான் உற்பத்தி ' தொடர்பான 02 நாட்கள் பயிற்சிச் செயலமர்வு அந்நிறுவனத்தின் இயக்குனர் திரு : சுனில் ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது எமது இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் 12 பேர் பங்குபற்றி திறன்பட காளான் உற்பத்தியை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றி அறிந்து கொண்டனர். அத்துடன் விரிவுரையானது செயற்பாட்டு ரீதியாகவும் அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விரண்டு நாள் பயிற்சி செயலமர்வை முடித்துக் கொண்ட பங்குபற்றுனர் அனைவருக்கும் காளான் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியும் இயக்குனருமான திரு சுனில் ராஜபக்ச அவர்கள் பெறுமதிவாய்ந்த சான்றிதழினையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பயிற்சி நிலையத்தில் பங்குபற்றிய அனைவரும் நிற்பதையும், செயல்முறைப் பயிற்சியில் ஈடுபடுவதையும் , கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்

..
BY:- எம்.ஐ. நௌசாத்

No comments:
Post a Comment