Pages

Jun 2, 2013

13 ஆவது திருத்தத்தை நீக்குவதா?: மு.கா. உயர்பீடம் இன்று ஆராய்வு

13 ஆவது திருத்தச் சட்டதi;த நீக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் அது தொடர்பில் ஆராயும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

கட்சி தலைமையகமாக தாருஸ் ஸலாமில் இன்று மாலை நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை தெரிவிப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறியவருகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையிலே மு.கா. இதுபற்றி ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment