தேர்தல்கள் செயலகம் இன்றைய நாளை வாக்காளர் தினமாக பிரகடனம் செய்துள்ளது.
வாக்காளர் பெயர் பட்டியலில் பதியப்பட வேண்டிய அனைவரினதும் பெயர்களை அதில் உள்ளடக்கும் வகையில் இன்று முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் இருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாக்கு உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்மாடி குடியிருப்புக்களில் வாழும் சிலருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்களில் ஒரு பிரிவினரும் இதுவரை காலமும் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாமல் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
போக்குவரத்து வசதிகள் இன்மையால் மலையகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருசில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பெயர்களே வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இடம்பெறாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரை சொகுசு மற்றும் சொகுசு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் சிலரும் வாக்காளர் இடாப்பில் தமது பெயரை பதிவு செய்துகொள்ளவில்லை என தேர்தல்கள் செயலகம் தெரியவித்துள்ளது.
வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களும் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட வேண்டியது கட்டாயம் என தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பெயர் பட்டியலுக்கு உள்வாங்கப்படாத இத்தகைய பிரிவினரை தெளிவுபடுத்துவதற்கான விசேட செயற்றிட்டமொன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment