Pages

May 10, 2013

ஜமாஅதே இஸ்லாமியின் மற்றுமொரு மூத்த தலைவருக்கு மரண தண்டனை


kamaruzaman_jamathe_islami_muslimcn
பங்களாதேஷ்  பெரிய இஸ்லாமியக் எதிர் கட்சியான ஜமாஅதே  இஸ்லாமியின்  மற்றுமொரு மூத்த தலைவர் ஒருவருக்கு பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து பிரிவினை பெறுவதற்கான பங்களாதேஷ்   போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் ‘மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக’ அவருக்கு இந்தத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாஅதே  இஸ்லாமி கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரான முஹமட் கமரூஷாமனுக்கு   இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது ஹசீனா அரசாங்கத்தின் பழிவாங்களாக பார்க்கப் படுகிறது. அரசியல் பழிவாங்கல் என்று விமர்சகர்களால் கூறப்படும் இந்த விசாரணை மன்றத்தின் மூலம் இஸ்லாமிய கட்சியின் பல மூத்த தலைவர்கள்   நீதி என்ற பெயரில் பழிவாங்கப் படுவதாக தெரிவிக்கப் படுகிறது.
தலைநகர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்ட 4 வது அரசியல்வாதி கமரூஷாமன் ஆவர்.இந்த தீர்ப்புக்களுக்கு எதிராக பங்களாதேஷத்தில் இந்த வருடத்தில் நடந்த போராடங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment