Pages

May 10, 2013

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டம்


ஏதிர்வரும் செய்வாய்க்கிழமை(14) ஒரு நாள் சுகவீனலீவுப் போராட்;டம் மேற்கொள்ள ஆசிரியர் சங்கங்கள் உத்தேசியத்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் எம். ஆனஸ் தெரிவித்தார்.

இந்நடவடிக்கை குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு விடுத்த கோரிக்கைக்கான காலக்கெடு, இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறை வடைந்துள்ளது.

இதுவரை, எந்தச் செய்தியோ, பதிலோ கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளரிட மிருந்தோ,மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமிருந்தோ, ஆளுனரிடமிருந்தோ கிடைக்க வில்லை.

வுழங்கப்பட்ட காலத்துக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாததனால் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளன.

எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஒருநாள் சுகவீனலீவுப் போராட்டத்தில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பானன ஒழுங்கமைப்புக் கூட்டம் நாளை(11) சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment