Pages

May 31, 2013

சம்மாந்துறை பிரதேச மக்களுக்குமான விஷேட அறிவித்தல்.

சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் சகல மக்களுக்குமான விஷேட அறிவித்தல்.

கடந்த 2005.06.30 ஆம் திகதி 139/16 ஆம் இலக்க சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி பத்திரிகையின் வாயிலாக சம்மாந்துறை பிரதேச செயாலாளர் பிரிவும் ஒரு நகர அபிவிருத்தியின் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் படி இத் திகதியில் இருந்து இப் பிரதேசத்தினுள் நிர்மாணிக்கப்பட்ட சகல நிர்மாணங்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சிபாரிசின் அடிப்படையில் பிரதேச சபையின் எழுத்து மூலமான முன் அனுமதியை பெற்றே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் ஆனால் பெரும் பாலானோர் தங்களது கட்டிடங்களை தமது விருப்பின் படியே நிர்மாணிக்கின்றனர்.


இதனால் அயலவர்களின் காணி ஆக்கிரமிப்பு தொல்லையும் ஏற்பட்டதுடன் , சுகாதரற்ற நிர்மாணிப்பு , பொது சுவர் எல்லை பிரச்சினை மற்றும் வீதி ஆக்கிரமிப்பு , போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இவ் விடயம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை மிக அண்மையில் எமது பிரதேசத்தில் மேற்கொண்ட கல பரிசோதனையில் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம் சரிவர எமது பிரதேசத்தில் நடை முறை படுத்த படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.



அதாவது அனுமதி பெறப்படாமல் பெரும்பாலான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து சம்மாந்துறை பிரதேச சபை சட்ட நடவைக்கை எடுக்க தவறி உள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் , சட்ட ரீதியான எழுத்து மூல அனுமதி இன்றி நிர்மைகப்பட்டுள்ள பல கட்டிடங்களை அடையாளம் கண்டு அவைகளை உடைத்து அகற்றுவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே , எதிர் காலங்களிலாவது கட்டிடங்களை நிர்மாணிக்க உள்ளவர்கள் இவ்வாறன அசவ்காரியங்களை தவிர்த்து கொள்ள உதவுவதற்க்கும் , திட்டமிட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட சுகாதாரமான , பசுமையான ஒரு நகரத்தை எமது எதிர்கால சந்ததி இனருக்கு பெற்றுக்கொடுக்கொடுப்பதற்க்காகவும் இவ் அறிவித்தல் செய்யப்படுகிறது.

எனவே , இது வரை முன் அனுமதி இன்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடச் சொந்தக்காரர்கள் கட்டிடங்களுக்கானஅனுமதியை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறும் , எதிர்காலத்தில் மேட்கொள்ளப்படவுள்ள எந்த ஒரு நிர்மானமாயினும் (எல்லை சுவராக இருந்தாலும்) சரி அவைகளுக்கான சட்ட ரீதியான எழுத்து மூலமான முன் அனுமதியை பிரதேச சபையிடம் பெற்றுக்கொண்டு மேற்கொள்வதன் மூலம் அசவ்கரியன்களை தவிர்த்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதுடன் , எதர் வரும் காலங்களிலும் இன் நடை முறைகளை கடைப்பிடிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

தவறும் பட்சத்தில் ,1982 ஆண்டின் 4 இலக்கம் கொண்ட , 1984 ஆம் ஆண்டின் 44 இலக்கம் கொண்ட சட்டங்களினால் திருத்திய 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்கம் கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். என சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். எம். நௌசாட் தெரிவித்தார்.

- See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_4095.html#sthash.5U3OYt4D.dpuf

No comments:

Post a Comment