பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் முஸ்தபா(13)என்ற சிறுவன் 24மணி நேரமும் இணையதளத்தில் தனது முகப்புத்தகம் மூலம் பல முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு முகப்புத்தகத்தில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.
புதிய தோழமையை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை, அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், ´முஸ்தபாவை விடுவிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.5 கோடி தர வேண்டும். தவறினால் அவனை கொன்று விடுவோம்´ என்று கூறி மிரட்டினர். இச்சம்பவம் குறித்து கராச்சி பொலிசாரிடம் அவர் புகார் அளித்தார்.
அவருக்கு தொடர்ந்து வந்த செல்போன் அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த பொலிசார் செல்போன் சிக்னலின்படி, கடத்தல்காரர்களின் ரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறுவன் முஸ்தபாவை பொலிசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், முகப்புத்தகம் போன்ற இணையதளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்´என்று கூறினார்.

No comments:
Post a Comment