அமெரிக்க உணவு நிறுவனம், கோழி முட்டைக்கு பதிலாக, தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஹாம்டன் க்ரீக் புட்ஸ் நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் உதவியுடன், முட்டை தயாரித்து வருகிறது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள், முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து, அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட்டை, சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு டெட்ரிக் கூறினார்.

No comments:
Post a Comment