Pages

May 9, 2013

குருகல பிரதேச கட்டடங்களை அகற்றாது போனால் முற்றுகையிடப்படும் – பொதுபல சேனா

மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர், பலாங்கொட குருகல பிரதேசத்தில் உள்ள கட்டடங்களை அகற்றாது போனால், 05 ஆயிரம் பேருடன் வந்து குருகலவை முற்றுகையிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பினர், குருகலவில் தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டுள்ள அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் சின்னத்தை கொண்ட வேன் ஒன்றில் சென்ற இந்த குழுவினரில் கண்டி மற்றும் பெப்பிலியான விகாரைகளின் பிக்குமாரும் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருகல பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல் உள்ளிட்ட ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment