Pages

May 9, 2013

, அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை

9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை,நாட்டின் 9 முன்னிலை பாடசாலைகளின் அதிபர்கள் குறித்து ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் சுற்றறிக்கைகளை கணக்கிலெடுக்காமை, அநாவசிய நிதி கையாள்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறுவதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அதிபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் அதிபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட எல்பிட்டி பகுதி தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment