.பழங்குடியினர் பகுதியில், அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்தும் தாக்குதல் சட்டவிரோதமானது என்று பாகிஸ்தானின் பெஷாவர் நகர உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில், சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் அப்பாவி மக்கள் பலியானதாக கூறி பெஷாவர் நகர உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி டோஸ்த் முகமது கான் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அதைத் தொடர்ந்து நேற்று அவர்கள் பிறப்பித்த உத்தரவு: அமெரிக்காவின் தாக்குதலில் அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இது சட்டவிரோதமான தாக்குதல். வருங்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடக்காமல், பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை ஐ.நா. பேரவையில் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடிக்க வைத்தால், அந்நாட்டுடன் தூதரக உறவை முறித்துக் கொள்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment