Pages

May 28, 2013

பாராசூட்டில் இருந்து குதித்து 87 வயது முதியவர் சாதனை



அமெரிக்காவை சேர்ந்தவர் கிளாரன்ஸ் டர்னர். 87 வயது முதியவரான இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற விமானப்படை வீரர் ஆவார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று விமானத்தில் பறந்து சென்று அங்கிருந்தபடியே பாராசூட் மூலம் கீழே குதித்து சாதனை படைத்தார்.

இவரது பேரனின் 10 மாத குழந்தை ஜூலியன் கவுச் நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வருகிறான். அவனுக்கு வருகிற 2-ந் தேதி நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு நிதி திரட்டவே இந்த சாகச நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டார்.
இதற்கு முன்பு இவர் தனது 85-வது வயதில் ஜப்பானில் பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார். 1944 முதல் 1947 வரை ராணுவத்தில் பணிபுரிந்த போது பலதடவை பாராசூட்டில் இருந்து குதித்து பயிற்சி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment