Pages

May 10, 2013

அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அடக்குமுறைகளுக்காக பயன்படுத்துகின்றது – சுமந்திரன்


அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அடக்குமுறை நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் சஹரிய சட்டங்களை விடவும் மோசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மக்களின் காணிகள் சட்டவிரோதமான முறையில் சுவீகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு சுப நேரத்தில் சாதமகான கிரக அடிப்படையில் வடக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் அரசாங்கத்தினால் வெற்றிகொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாஅரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அடக்குமுறைகளுக்காக பயன்படுத்துகின்றது – சுமந்திரன்ர்.

No comments:

Post a Comment