ஐக்கிய தேசியக் கட்சியினால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்திற்கான யாப்பின் நகல் நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்திற்கான யாப்பின் நகல் நாளை பாராளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது.
இந்த யாப்பில் பல மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான மூன்று யோசனைகள் உத்தேச யாப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று அதிகாரப் பகிர்வு, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் மக்கள் ஆணை மேலோங்கும் வகையிலான பல யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரசியலில் பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்தல், பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை ஒரே தடவையில் நடத்துதல் போன்ற பல விடயங்கள் உள்ளன.
இதேவேளை, இது குறித்த ஆலோசனைகளை மக்களிடம் இருந்து பெறும்பொருட்டு மூன்று மாதகால தவணை வழங்கப்படும். இதனை நல்ல முறையில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றது என்றார்.

No comments:
Post a Comment