ஜனாதிபதிக்கு அரசியலில் இன்றுடன் 43 வயது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
24 வயது இளைஞனாக மஹிந்த ராஜபக்ஷ இருந்தபோது பெலியத்த தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1970 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
2004 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அத்துடன் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 திகதி பதவியேற்றார்.
No comments:
Post a Comment