Pages

May 27, 2013

பால் மா விற்பனையில் வீழ்ச்சி.

நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இரசாயனப் பதார்த்தம் கலந்துள்ளதாக வெளியான செய்தியை அடுத்து பால்மா விற்பனையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்களில் அதிகமானவர்கள் பால்மா பாவனையை கைவிட்டுள்ளதாகவும் இதனால் பால் மா விற்பனை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நியூசிலாந்தில் கறவைப் பசுக்கள் மேயும் புல் தரைக்கு டி. சி. டி. என்னும் இரசாயனம் தெளிக்கப்படுவதைத் தொடர்ந்து அப்புல்லினை உட்கொண்ட பசுக்களில் இருந்து பெறப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்மா இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கத்தினைக் கொண்டிருப்பதாக சில நாடுகள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவ்விடயம் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுக் குழு என்பன உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்திய போதிலும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளாது பால்மா பாவனையை கைவிட்டுள்ளனர்.

நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எவ்வித கதிரியக்கத் தாக்கமும் இல்லை என இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்சித் லக்ஷ்மன் விஜேவர்தன தெரிவித்தார்.

இவற்றை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பால்மா பாவனையை விடுத்து பால்மா பக்கட்டு கொள்வனவை தவிர்த்துள்ளனர். இதனால் பால்மா விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(VK)

No comments:

Post a Comment