Pages

May 21, 2013

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது!- ரவூப் ஹக்கீம்

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதே எமது நிலைப்பாடு.

அரசாங்கத்துடன் இணைந்திருந்து எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வழியமைப்பதே எமது நோக்கமாகும். அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி அதன் மூலம் நன்மைகளை அடைய முயற்சிக்கப்படும்.

எனினும் தேவை ஏற்பட்டால் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு எங்களுக்கு சுதந்திரம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி உடுநுவர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment