,
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஹர்த்தால் இடம்பெறவில்லை.
காத்தான்குடி ,ஏறாவூர் ,ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் வழமைபோன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள், காரியாலயங்கள், வங்கிகள் என்பனவும் இயங்குகின்றன.
இப் பி்ரதேசங்களில் காலை வேளையில் ஓரிரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தபோதிலும் பின்னர் அனைத்தும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரம் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளை சித்தாண்டி இராணுவ முகாமுக்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடிய இராணுவத்தினர் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது..JPG)
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஹர்த்தால் இடம்பெறவில்லை.
காத்தான்குடி ,ஏறாவூர் ,ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் வழமைபோன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள், காரியாலயங்கள், வங்கிகள் என்பனவும் இயங்குகின்றன.
இப் பி்ரதேசங்களில் காலை வேளையில் ஓரிரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தபோதிலும் பின்னர் அனைத்தும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரம் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளை சித்தாண்டி இராணுவ முகாமுக்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடிய இராணுவத்தினர் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
No comments:
Post a Comment