Pages

May 9, 2013

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டார்


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசூஃப் ராசா கிலானி அவர்களது மகன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக தற்போது வந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன.
 
அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் தனது ஒரு மகன் கடத்தப்பட்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
 
தென்பகுதி பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, தனது மகனான அலி ஹைதர் கடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
மதசார்பற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு வேட்பாளராக முல்தான் நகரில் அலி ஹைதர் போட்டியிடுகின்றார்.
 
தனது தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்தவர்கள், கூட்டத்தில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, அலி ஹைதரை ஒரு காரில் கடத்திச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அவருடன் இருந்தவர் ஒருவர் இதில் கொல்லப்பட்டதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
 
ஆயுதபாணிகளால் தேர்தல் வாக்குச் சாவடிகள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக பல்லாயிரக்கணக்கான சிப்பாய்களை தாம் கடமைக்கு அனுப்பியுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் கூறியுள்ளது.
 
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment