Pages

May 7, 2013

மழை வெள்ளத்தால் 23002 பேர் பாதிப்பு: 2088 பேர் 10 முகாம்களில்


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 5419 குடும்பங்களைச் சேர்ந்த 23002 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வர்களில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 2088 பேர் 10 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவரும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது


இதேவேளை, இன்றைய தினமும் மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

No comments:

Post a Comment