Pages

May 8, 2013

இந்துக் கடவுளை அவமதித்ததாக டோணி மீது வழக்கு


இந்துக் கடவுளான விஷ்னுவின் வேடத்தில் விளம்பரமொன்றில் தோன்றியமை தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோணிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்துக்கடவுளை டோணி அவமதித்துள்ளதாகவும் இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாகவும் டோணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜெயகுமார் ஹிரேமத் என்பவர் பெங்களுர் நீதிமன்றமொன்றில் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

சஞ்சிகையொன்றில் விளம்பரத்தில் வின்னுவின் வேடத்தில் டோணி தோன்றியதாகவும் விஷ்னுனுவின் கையில் பாதணிகள் உட்பட பல பொருட்களை ஏந்தியிருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் ஹிரேமத் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டோணி மீது நீதிவான் சூரிகான், இந்திய குற்றவியல் கோவையின் 295 மற்றும் 34ஆவது பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்தார்.

இவ்வழக்கு தொடர்பாக முறைப்பாட்டாளரின் அறிக்கையை பதிவுசெய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment