நகர்புரங்களில் காணப்படும் வசதிவாய்ப்புக்களை கிராமப்புரங்களுக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை…

நகரப்புரங்களில் காணப்படும் வசதி வாய்புக்களை கிராமப்புரங்களுக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அடிப்படை வசதிகளுக்கு மேலதிகமாக நிழலின்றி அவதிப்படும் சகலருக்கும், வீடுகளை பெற்றுக்கொடுக்க மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தினூடாக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனசெவன 10 லட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின்கீழ், நிர்மாணிக்கப்படும் சியனே சென்டர் பார்க் வீடமைப்புத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 180 லட்சம் ரூபா செலவில் 40 வீடுகள் ஒரு வருடகாலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. இதேவேளை அபிவிருத்தி துறையில் புதிய கால்தடத்தை தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் பெற்றுள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment