ஒலுவிலில் காணிகளை இழந்தவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.

நட்டஈடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து காணியமைச்சின் அதிகாரிகளை கேட்டறிந்ததோடு, விரைவில் துறைமுகம் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காணி அபிவிருத்தியமைச்சின் செயற்பாட்டு மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள், அத்துமீறிய குடியேற்றங்கள், மக்களிடமிருந்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காணிகளுக்காக நட்டஈடு கோறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அது தொடரபில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி காணியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment